வெடிகுண்டு அச்சுறுத்தல்! - Saint-Lazare தொடருந்து நிலையத்தில் பரபரப்பு!
6 கார்த்திகை 2023 திங்கள் 14:39 | பார்வைகள் : 10741
Saint-Lazare தொடருந்து நிலையத்தில் உள்ள விற்பனைப்பகுதிக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று நவம்பர் 6, திங்கட்கிழமை காலை இந்த வெடிகுண்டு அச்சுறுத்தல் மின்னஞ்சல் மூலமாக விடுக்கப்பட்டிருந்தது.
பயணிகள் அனைவரும் வெளியேற்றப்படு, நிலையம் சோதனையிடப்பட்டது. குறித்த வணிகப்பகுதியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக Transilien சேவைகள் நிறுத்தப்படாமல் பயணித்தது.
பின்னர் அனைத்துப் பகுதிகளும் சோதனையிடப்படதன் பின்னரே மீண்டும் நிலையம் திறக்கப்பட்டது.


























Bons Plans
Annuaire
Scan