காசாவில் உணவு பற்றாக்குறை - ஐக்கிய நாடுகள் சபை வேதனை
7 கார்த்திகை 2023 செவ்வாய் 07:01 | பார்வைகள் : 3891
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையேயான போரினால் காசா பகுதியில் உணவு பொருட்கள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் காசாவில் வாழும் மக்களுக்கான உணவு பொருட்கள் கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
காசாவிற்கான சர்வதேச உதவிகள் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இரண்டு மில்லியன் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக ரஃபா எல்லை நுழைவை தவிர மற்ற காசாவின் அனைத்து நுழைவு புள்ளிகளும் அடைக்கப்பட்டுள்ளன.