Paristamil Navigation Paristamil advert login

Eurodreams அதிஷ்டலாபச் சீட்டில் வெற்றி பெற்ற இரு பிரெஞ்சு நபர்கள்!

Eurodreams அதிஷ்டலாபச் சீட்டில் வெற்றி பெற்ற இரு பிரெஞ்சு நபர்கள்!

7 கார்த்திகை 2023 செவ்வாய் 08:50 | பார்வைகள் : 10104


Eurodreams எனும் புதிய அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பில் இரு பிரெஞ்சு நபர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஐரோப்பாவின் எட்டு நாடுகளில் விற்பனைக்கு வந்த இந்த சீட்டிழுப்பில் முதலாவது வெற்றியாளர்களான இருவரும் பிரான்சைச் சேர்ந்தவர்களாவர்.

வெற்றி பெற்றவர்களுக்கு மாதம் 20,000 யூரோக்கள் படி, 30 வருடங்களுக்கு வழங்கப்பட உள்ளது. 

இந்த புதிய Eurodreams அதிஷ்டலாப சீட்டிழுப்பினை ஐரோப்பா முழுவதும் 7.5 மில்லியன் பேர் பங்கேற்றிருந்தனர். 2.50 யூரோக்களுக்கு வாங்கப்படும் ஒரு சீட்டில் வெற்றிக்குரிய இலக்கமாக 10-13-14-25-30-35 ஆகிய ஆறு இலக்கங்களும், ‘கனவு’ இலக்கமாக ‘இலக்கம் 5’ ம் தெரிவுசெய்யப்பட்டு வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

விற்பனையான அதிஷ்டலாபச் சீட்டுக்களில் 43% சதவீதமானவை பிரான்சிலேயே விற்பனையாகியுள்ளது. ஒவ்வொரு வாரத்தின் திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். 

Euromillion அதிஷ்டலாபச் சீட்டிழுப்பினை வழங்கும் அதே FDJ நிறுவனமே Eurodreams அதிஷ்டலாபச் சீட்டிழுப்பினையும் வழங்குகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்