Paristamil Navigation Paristamil advert login

சர்ச்சைகளை ஆரம்பித்து வைத்துள்ளது 'தக் லைப்'...?

 சர்ச்சைகளை ஆரம்பித்து வைத்துள்ளது 'தக் லைப்'...?

7 கார்த்திகை 2023 செவ்வாய் 12:03 | பார்வைகள் : 4068


மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில், கமல்ஹாசன், த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் மற்றும் பலர் நடிக்கும் கமல்ஹாசனின் 234வது படத்தின் தலைப்பு 'தக் லைப்' என நேற்று அதன் அறிவிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார்கள்.

அதில் சிலரை எதிர்த்து கமல்ஹாசன் சண்டை செய்து, ஆவேச வசனம் வீசும் 2 நிமிட 55 வினாடி வீடியோ இடம் பெற்றிருந்தது. அந்த வீடியோவில் கமல்ஹாசனின் தோற்றமும், அவரை எதிர்த்து சண்டையிட வரும் நபர்களின் தோற்றம், அந்த வீடியோவின் படமாக்கம் ஆகியவை 2019ல் வெளிவந்த 'ரைஸ் ஆப் ஸ்கைவாக்கர்' படத்தின் காப்பி ஆக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்துள்ளது.

பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். இப்படியான காப்பி சர்ச்சை மணிரத்னம், கமல்ஹாசன் ஆகியோருக்கு புதிதல்ல என்றும் சிலர் விமர்சனங்களை வைத்துள்ளார்கள்.

அத்துடன் கமல்ஹாசனின் கதாபாத்திரப் பெயரான 'ரங்கராய சக்திவேல் நாயக்கன்' என்பதும் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதிய படங்கள் அதிகம் வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் கமல்ஹாசனும் இப்படி ஒரு சாதிப் பெயருடன் தனது படத்தின் கதாபாத்திரத் தலைப்பை வைத்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்