ஜெருசலேம் புராதன நகரின் மதில் சுவரில் பிணைக் கைதிகளின் புகைப்படங்கள்
7 கார்த்திகை 2023 செவ்வாய் 12:24 | பார்வைகள் : 4127
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை 32வது நாளாக நடந்து வருகிறது.
இதில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதுடன் மில்லியன் கணக்கான மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
முதலில் இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதலை தொடங்கியதுடன், இஸ்ரேலிய மற்றும் வெளிநாட்டு குடிமக்கள் 240 பேரை ஹமாஸ் பிணைக் கைதிகளாக காசாவுக்கு பிடித்து சென்றனர்.
அத்துடன் வெளிவந்துள்ள தகவல்களின் அடிப்படையில் இதுவரை இஸ்ரேல் ஹமாஸ் போரில் 11,330 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
பொதுமக்கள் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் போர் நிறுத்தம் வேண்டும் என அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.
ஆனால் பிணைக் கைதிகளை விடுவித்து ஹமாஸ் ஆட்சியாளர்களை அழிக்கும் வரை போர் நிறுத்தம் இல்லை என இஸ்ரேல் தரப்பு திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் ஜெருசலேமின் புராதன நகரத்தில் உள்ள மதில் சுவர் மீது ஹமாஸ் அமைப்பினரால் பிடித்து செல்லப்பட்டுள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.