Paristamil Navigation Paristamil advert login

ராகவா லாரன்ஸ் பட இயக்குனர் அற்புதன் விபத்தில் திடீர் மரணம்..

ராகவா லாரன்ஸ் பட இயக்குனர் அற்புதன்  விபத்தில் திடீர் மரணம்..

7 கார்த்திகை 2023 செவ்வாய் 14:14 | பார்வைகள் : 2988


நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் கடந்த 2002 ஆம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் ’அற்புதம்’. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தை அற்புதன் என்பவர் இயக்கி இருந்தார்.

ராகவா லாரன்ஸ், குணால், பிரமிட் நடராஜன், லிவிங்ஸ்டன், லாவண்யா, நந்திதா உள்பட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்கிய அற்புதன் சமீபத்தில் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அற்புதன், சிகிச்சையின் பலன் இன்றி சற்றுமுன் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த இயக்குனர் அற்புதன் அவர்களுக்கு வயது 52. ’அற்புதம்’ படத்தை அடுத்து ’மனதோடு மழைக்காலம்’ ’செய்யவே சிறுகாளி’ ஆகிய படங்களையும் இவர் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் சாலை விபத்தில் மரணம் அடைந்த அற்புதன் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றன

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்