கருப்பை மாற்று அறுவைச் சிகிச்சை - சகோதரியின் உதவியால் குழந்தை பெற்றெடுத்த பெண்!
7 கார்த்திகை 2023 செவ்வாய் 18:00 | பார்வைகள் : 4494
பெண் ஒருவர் தனது சகோதரியின் உதவியால் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். கருப்பை மாற்று அறுவைச் சிகிச்சையால் இது சாத்தியமாகியுள்ளது.
ஒக்டோபர் 31, Suresnes (Hauts-de-Seine) நகரில் உள்ள Foch மருத்துவமனையில் பெண் ஒருவர் அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். ஆனால் இந்த பெண் குழந்தை மருத்துவ உலகத்துக்கு சவால் விடும் பெரும் சாதனையாக பிறந்துள்ளது. குழந்தையின் தாயாரால் கருத்தரிக்க முடியாத சூழ்நிலை இருந்தது. கருப்பையில் போதிய முட்டை உற்பத்தி செய்ய முடியாமல் இருக்க, அவரது சகோதரியின் முட்டைகளை எடுத்து இப்பெண்ணின் கருப்பைக்குள் வைத்து , கணவரது விந்து செலுத்தப்பட்டு முட்டை உயிர்ப்பிக்கப்பட்டது. முதல் முயற்சியிலேயே குழந்தை உருவானது.
பத்து மாதங்களில் குழந்தை ஆரோக்கியமாக பிறந்துள்ளது.
உலகம் முழுவதும் பெரும் அரிதான நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. கருப்பை மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் பிரான்சில் குழந்தை பிறப்பது இது மூன்றாவது முறையாகும்.