Paristamil Navigation Paristamil advert login

கருப்பை இல்லாமல் பிறக்கும் பெண் குழந்தைகள், 4000 பெண்களில் ஒருவர்.

கருப்பை இல்லாமல் பிறக்கும் பெண் குழந்தைகள், 4000 பெண்களில் ஒருவர்.

7 கார்த்திகை 2023 செவ்வாய் 16:57 | பார்வைகள் : 4273


பிரான்சில் பிறக்கும் 4000 பெண் குழந்தைகளில் ஒருவர் கருப்பை இல்லாமல் பிறக்கிறார்கள் எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு கருப்பை இல்லாமல் பிறந்து இன்று 30 வயதாகும்  Océane என்னும் மகளுக்கு Gaétane எனும் 57வயதான தாயார் தனது கருப்பையை தானம் செய்ய முன்வந்தார். இந்த மாற்று அறுவை சிகிச்சை Hauts-de-Seine நகரில் உள்ள (l'hôpital Foch) மருத்துவ மனையில் நடைபெற்றுள்ளது.

Océane பிறக்கும் போதே "Rokitansky syndrome" எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு கருப்பை இல்லாமல் பிறந்தார், இதனால் தான் கருவுற முடியாது எனும் மனோநிலையில் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் கருப்பை மாற்று அறுவைச் சிகிச்சை அவரின் கவலைகளை மாற்றியமைத்தது.

2019ல்  முதல் அறுவைச் சிகிச்சை, 2022ல் இரண்டாவது அறுவைச் சிகிச்சை, ஒக்டோபர் 21ம் திகதி மூன்றுவது அறுவைச் சிகிச்சை மூலம் இனி Océane தாராளமாக கருவுற்று குழந்தைகளை பெறலாம் எனும் நிலையை மருத்துவம் உலகம் அவருக்கு வழங்கியுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்