Paristamil Navigation Paristamil advert login

'protoxyde d'azote' எனும் ஒரு வகை வாயுவை நுகர்வோர் Hauts-de-France மற்றும் lle-de-France பகுதிகளில் அதிகம்.

'protoxyde d'azote' எனும் ஒரு வகை வாயுவை நுகர்வோர் Hauts-de-France மற்றும் lle-de-France பகுதிகளில் அதிகம்.

7 கார்த்திகை 2023 செவ்வாய் 19:30 | பார்வைகள் : 13781


'protoxyde d'azote' எனும் ஒரு வகை வாயுவை நுகர்வோர் Hauts-de-France மற்றும் lle-de-France பகுதிகளில் அதிகம்.

'protoxyde d'azote' எனும் வாயுவை போதைவஸ்துவாக நுகர்வோர் Hauts-de-France மற்றும் lle-de-France பகுதிகளில் அதிகரித்து உள்ளது என (Agences régionales de santé) பிராந்திய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த வாயுவை நுகர்ந்த பாதிப்பில் சுமார் 100 இளையோர் மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டனர் என தெரியவருகிறது.

ஒருவகை போதைக்காக இளையோர் நுகரும் 'protoxyde d'azote' எனும் வாயு 
நரம்பியல், இருதய, உளவியல், நோய்களை ஏற்படுத்தும் எனவும், அதிகமாகும் போது மரணம் கூட சம்பவிக்கும் எனவும், நுகர்ந்த பின்னர் வாகனங்களை செலுத்தும் போது வீதி விபத்துகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் பொது சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவலின்படி 18 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே அதிகமாக இதன் பாவனைஉள்ளது. "18-24 வயதுடையவர்களில் 13.7% சதவீத இளையோர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது நைட்ரஸ் ஆக்சைடை உட்கொண்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

Hauts-de-France மற்றும் lle-de-France பகுதிகள் இதற்கு எதிரான பிரச்சாரத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.  தங்களின் பிரச்சாரத்தை Snapchat, TikTok, Instagram, Youtube போன்ற சமுக வலைதளங்களில் வெளியிடவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்