புதிய சட்டத்திருத்தம் வெளிநாட்டவர்கள் குடும்ப ஒன்றிணைவுக்கான நிபந்தனைகளில் மொழி அவசியம்.
7 கார்த்திகை 2023 செவ்வாய் 20:33 | பார்வைகள் : 7652
பிரான்சில் வாழும் வெளிநாட்டவர்களில் ஒருவர் தனது குடும்பத்தை பிரான்சுக்கு அழைக்கும் போது அவரின் மனைவியோ, பிள்ளைகளோ பிரஞ்சு மொழியில் குறைந்தளவேனும் தகமை உள்ளவர்களாக இருக்க வேண்டும் என புதிய சட்டம் பிரான்சில் வரவுள்ளது.
முன்பு வெளிநாட்டவர் தங்கள் பிள்ளைகளை பிரான்சுக்கு அழைக்கும் வயது 18ஆக இருந்தது இப்போது வயதெல்லை 21ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குறித்த நபர் குறைந்தது 24 மாதங்கள் வதிவிட அனுமதியுடன் பிரான்ஸ் மண்ணில் தங்கி வாழ்ந்திருக்க வேண்டும், தன்னுடையதும் தனது குடும்ப உறுப்பினர்களினதும் மருத்துவக் காப்புறுதியை 'assurance malade' அவரே தனது பொறுப்பில் செய்துகொள்ள வேண்டும். இந்த நிலைகள் இல்லாத ஒருவர் தனது குடும்பத்தை ஒன்றிணைக்கும் பணிகளை செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.