வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் பாதி - மீண்டும் 49.3 அரசியலமைப்பை பயன்படுத்திய பிரதமர்!!

8 கார்த்திகை 2023 புதன் 07:00 | பார்வைகள் : 6901
2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் பாதியை நேற்று பாராளுமன்றத்தில் 49.3 எனும் அரசியலமைப்பினை பயன்படுத்தி நிறைவேற்றினார். இதனால் பாராளுமன்றத்தில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
Elisabeth Borne பிரதமராக அறிவிக்கப்பட்டதில் இருந்து பதினாறாவது தடவையாக இந்த அரசியலமைப்பு சட்டத்தை அவர் பயன்படுத்தியுள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தினை முழுமையாக அவர் இந்த அரசியலமைப்பை பயன்படுத்தியே நிறைவேற்றினார்.
பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றி சட்டம் ஒன்றை நிறைவேற்றுவதற்காக பயனப்படுத்தப்படும் குறித்த அரசியலமைப்பை பிரதமர் தொடர்ச்சியாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளதுடன், மக்ரோனின் அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றையும் சமர்ப்பித்தனர்.
”மக்ரோனின் அரசாங்கம் மீண்டும் மீண்டும் ஜனநாயகத்தை புறக்கணிக்கிறது. மக்கள் வாக்களித்த பிரதிநிதியை நிராகரிக்கும் அரசாங்கத்தைக் கண்டிக்கிறோம்!” என LFI கட்சித்தலைவர் Mathilde Panot தெரிவித்தார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1