காணாமல் போன சிறுவன் Émile - உறவினர்களின் வீடுகளில் தேடுதல்!!
8 கார்த்திகை 2023 புதன் 08:00 | பார்வைகள் : 7003
எலிமி எனும் இரண்டரை வயதுச் சிறுவன் காணாமல் போன சம்பவம் அறிந்ததே. Haut-Vernet எனும் சிறு மலைக்கிராமத்தில் கடந்த ஜூலை மாத ஆரம்பத்தில் (ஜூலை 7) சிறுஅன் காணாமல் போயிருந்தான். சிறுவனைத் தேடும் பணி பெருமளவில் மேற்கொள்ளப்பட்டும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.
இந்நிலையில், நேற்று திங்கட்கிழமமை காலை நான்கு மாதங்களின் பின்னர் மீண்டும் தேடுதல் பணி இடம்பெற்றது. 50 ஜொந்தாமினர் இந்த தேடுதலை மேற்கொண்டிருந்தனர். முன்னதாக காடுகளிலும் மலைகளிலும் தேடுதல் பணி இடம்பெற்றிருந்த நிலையில், நேற்றைய தினம் சிறுவனின் உறவிகள் வீடுகள் பலவற்றில் தேடுதல் பணி இடம்பெற்றது.
குறிப்பாக Vernet (Alpes-de-Haute-Provence) நகரில் உள்ள சிறுவனின் தாத்தா முறை உறவினரது வீட்டில் ஜொந்தாமினர் தேடுதல் நடத்தினர். குறித்த வீட்டின் அருகே சிறுவனைக் கட்டதாக சாட்சியங்கள் தெரிவிக்கப்பட்டதை அடுத்தே அங்கு தேடப்பட்டது. அதேவேளை அருகில் உள்ள பல வீடுகளிலும் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
தொலைபேசிகள், கணனிகள் உள்ளிட்ட சாதனங்கள் சோதனையிடப்பட்டது. ஆனால் இந்த சோதனைகளில் குறிப்பிடத்தக்க தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அறிய முடிகிறது.