Paristamil Navigation Paristamil advert login

தலிஸ்காவின் ஹாட்ரிக் கோல் - அல் நஸர் அபார வெற்றி

தலிஸ்காவின் ஹாட்ரிக் கோல் - அல் நஸர் அபார வெற்றி

8 கார்த்திகை 2023 புதன் 04:02 | பார்வைகள் : 7321


தலிஸ்கா ஹாட்ரிக் கோல் அடித்ததன் மூலம் அல் நஸர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. 

கலிஃபா சர்வதேச மைதானத்தில் நடந்த AFC சாம்பியன்ஸ் லீக் தொடரில் அல் நஸர் மற்றும் அல் டுஹைல் அணிகள் மோதின.

ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் அல் டுஹைல் பிலிப் கொடின்ஹோ கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து அல் நஸர் வீரர் தலிஸ்கா 27வது நிமிடத்திலும், 37வது நிமிடத்திலும் கோல்கள் அடித்தார். 

இதனால் அல் நஸர் அணி முதல் பாதியில் 2-1 என முன்னிலை வகித்தது. அதன் பின்னரான இரண்டாம் பாதியிலும் தலிஸ்கா அதிரடி காட்டினார். 

அவர் 65வது ஹாட்ரிக் கோல் அடித்தார். அதுவே அல் நஸரின் வெற்றி கோலாக அமைந்தது. எனினும், 80வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி பிலிப் இரண்டாவது கோல் அடித்தார். 

அல் டுஹைல் அணியின் காலீத் 90+2 நிமிடத்தில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இறுதியில் அல் நஸர் 3-2 அல் டுஹைல் அணியை வீழ்த்தியது. 

இது அல் நஸர் அணிக்கு AFC தொடரில் 4வது வெற்றி ஆகும். முன்னதாக அல் எட்டிபாக் அணிக்கு எதிரான போட்டியில் தலிஸ்கா ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.   

வர்த்தக‌ விளம்பரங்கள்