பிரபுதேவா பட இயக்குநரின் அதிரடி அறிவிப்பு!

8 கார்த்திகை 2023 புதன் 06:03 | பார்வைகள் : 9365
பிரபுதேவா இயக்கம், நடனம் மட்டுமல்லாது முன்பை போலவே தற்போது நடிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் . நடிகர் விஜயுடன் ‘தளபதி 68’ படத்தை கைவசம் வைத்திருப்பவர் இயக்குநர் ஷக்தி சிதம்பரத்துடன் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதில் மடோனா செபாஸ்டின் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், யாஷிகா ஆனந்த், அபிராமி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ஜான் விஜய், ‘ஆடுகளம்’ நரேன், மதுசூதனராவ், ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். அஸ்வின் விநாயகமூர்த்தி இசை அமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம்பற்றி ஷக்தி சிதம்பரம் கூறும்போது, “இந்தப் படத்தின் கதைக்காக இரண்டு வருடங்கள் எடுத்துக் கொண்டேன். கதையை கேட்டுவிட்டு பிரபுதேவா உடனே சம்மதம் சொன்னார். படத்தின் டைட்டிலை மக்களே வைக்கலாம் என முடிவு செய்துள்ளோம். அறிவிப்பு விரைவில் வெளியாகும்" என்றார்.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025