சூரியனின் X-கதிர்களை படம் எடுத்த ஆதித்யா எல்-1 - இஸ்ரோ அறிவிப்பு
8 கார்த்திகை 2023 புதன் 06:55 | பார்வைகள் : 2149
ஆதித்யா எல்-1 சூரியனில் இருந்து வெளிவரும் எக்ஸ் கதிர்களை படமெடுத்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து காலை 11.50 மணி அளவில் இந்தியாவின் ஆதித்யா எல்1 விண்கலம் பிஎஸ்எல்வி 57 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்' எனும் இடத்தில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.
ஆதித்யா எல்1 விண்கலம் எல்1 எனும் இலக்கை சென்றடைய சுமார் 127 நாட்கள் வரை ஆகும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியிருந்தார்கள்.
இந்நிலையில் ஆதித்யா விண்கலன், சூரியனில் இருந்து வெளிவரும் எக்ஸ் கதிர்களை படமெடுத்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
சூரிய அனலில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களை முதல்முறையாக படமெடுத்து அனுப்பியுள்ளது.
இந்த புகைப்படமானது கடந்த 29 ஆம் திகதியன்று கிராப் வடிவில் இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது.
இதையடுத்து, விண்கலம் அனுப்பிய தரவுகள் சூரிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் குறித்த ஆய்வு செய்ய உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆதித்யா-எல்1 ஜனவரி 2024 இல் எல்1 புள்ளியை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.