ஆசிரியர்கள் பற்றாக்குறை, பதிவு காலத்தை நீட்டியது l'Éducation nationale.
8 கார்த்திகை 2023 புதன் 11:16 | பார்வைகள் : 2596
பிரான்சில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத நிலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. இந்த 2023-2024 கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்னர் அதிபர் Emmanuel Macron "இந்த கல்வியாண்டு தொடங்கும் போது ஒவ்வொரு மாணவனுக்கு முன்னும் ஒரு ஆசிரியர் நிற்பார்" என உறுதியளித்தார். ஆனால் அந்த உறுதிமொழி பொய்த்துப் போனது.
ஏறத்தாழ சுமார் 3000 ஆசிரியர்களுக்கான வெற்றிடமும், ஏனைய கல்விப் பணியாளர்களின் வெற்றிடமும் தொடர்ந்தும் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பாடசாலைகளுக்கான மனவள மருத்துவர்கள் அரச பணியில் சேரும் போட்டிக்கான திகதியை தேசிய கல்வி அமைச்சு நீட்டியுள்ளது.
கல்விக்கான அரச பணிக்கு போட்டியிடும் பதிவு திகதியை தேசிய கல்வி அமைச்சு நவம்பர் 9ம் திகதியில் இருந்து வரும் டிசம்பர் 7ம் திகதிவரை நீடித்துள்ளதாக இன்று அறிவித்துள்ளது.