Paristamil Navigation Paristamil advert login

ஆயுத விற்பனை நிலையத்தினை உடைத்து திருட்டு! - 25 துப்பாக்கிகள் மாயம்!

ஆயுத விற்பனை நிலையத்தினை உடைத்து திருட்டு! - 25 துப்பாக்கிகள் மாயம்!

8 கார்த்திகை 2023 புதன் 12:27 | பார்வைகள் : 3519


துப்பாக்கி விற்பனை நிலையம் ஒன்று உடைத்து, கொள்ளையிடப்பட்டுள்ளது. 25 துப்பாக்கிகள் 400 துப்பாக்கிக்குண்டுகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இக்கொள்ளை சம்பவம் Roanne (Rhône) நகரின் rue de Charlieu வீதியில் உள்ள ஆயுத விற்பனை நிலையத்தில் திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. 12 gauge துப்பாக்கிகள் 25, 400 துப்பாக்கிக்குண்டுகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

விற்பனை நிலையத்தில் அமைக்கப்பட்ட சமிக்ஞை ஒலி ஒலித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட போதும், காவல்துறையினர் வருவதற்கு முன்னர் கொள்ளையர்கள் தப்பிச் சென்றதாக அறிய முடிகிறது.

மகிழுந்து ஒன்றின் மூலம் விற்பனை நிலையத்தின் கதவு உடைக்கப்பட்டதாக அறிய முடிகிறது. இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.,

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்