Paristamil Navigation Paristamil advert login

இலங்கையை நோக்கி படையெடுக்கும் ஐரோப்பிய நாட்டு சுற்றுலா பயணிகள்

இலங்கையை நோக்கி படையெடுக்கும் ஐரோப்பிய நாட்டு சுற்றுலா பயணிகள்

8 கார்த்திகை 2023 புதன் 15:01 | பார்வைகள் : 6381


இலங்கைக்கு இந்த மாதத்தின் முதல் 5 நாட்களில் 22 ஆயிரத்து 202 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த வருடத்தில் இதுவரையில் இலங்கைக்கு 11 இலட்சத்து 47 ஆயிரத்து 657 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

இந்த மாதத்தின் முதல் 5 நாட்களில் ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து மூவாயிரத்து 866 பேர் வந்துள்ளனர்.

அத்துடன், ஜேர்மனியிலிருந்தும் இரண்டாயிரத்து 11 பேரும், பிரித்தானியாவிலிருந்து ஆயிரத்து 539 பேரும் வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்