பிரான்சில் பதிவான 1,159 யூத எதிர்ப்பு நடவடிக்கைகள்! - உள்துறை அமைச்சர் தகவல்!!

8 கார்த்திகை 2023 புதன் 18:14 | பார்வைகள் : 10656
பிரான்சில் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 1,159 யூத எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்துள்ளார்.
ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் ஆரம்பித்ததன் பின்னர், பிரான்சில் யூத மதம் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. சுவற்றில் நாஸி இலட்சணைகள் வரையப்படுவது அதிகரித்துள்ளது. நேற்று நவம்பர் 7 ஆம் திகதி வரையான ஒரு மாத காலத்தில் பிரான்சில் 1,159 சம்பவங்கள் இதுபோல் பதிவாகியுள்ளன.
2022 ஆம் ஆண்டில் பதிவான மொத்த யூதமதத்துக்கு எதிரான தாக்குல்களோடு ஒப்பிடுகையில் இது கணிசமான அதிகரிப்பாகும்.
அதேவேளை, இந்த ஒரு மாத காலத்தில் 518 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பலருக்கு சிறைத்தண்டனையும், பலருக்கு குற்றப்பணம் அறவிடப்பட்டது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1