Paristamil Navigation Paristamil advert login

சிலி நாட்டில் பாரிய தீ விபத்து - 14 பேர் பலி

சிலி நாட்டில் பாரிய தீ விபத்து -  14 பேர் பலி

9 கார்த்திகை 2023 வியாழன் 02:35 | பார்வைகள் : 6455


சிலி நாட்டின் தெற்கு நகரமான கொரோனலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் சிக்கி 8 சிறுவர்கள் உற்பட 14பேர் பலியாகியுள்ளனர்.

குறித்த விபத்தானது சிலியிற்கு சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அமைத்துள்ள தகர கொட்டகைகள், மரத்தால் வீடுகளில் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரும், மீட்புக்குழுவினரும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், அடுப்பில் சமையல் செய்யும் போது தீப்பற்றி, மர வீடுகளுக்கு பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்