ஈ.வெ.ரா., சிலையை அகற்றுவீர்களா? அண்ணாமலை விளக்கம்
9 கார்த்திகை 2023 வியாழன் 12:42 | பார்வைகள் : 2813
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட திருவானைக்காவலில் இருந்து, நேற்று முன்தினம், நடைபயணம் மேற்கொண்ட பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, ரெங்கநாதர் கோவில் ராஜகோபுரம் முன் பேசுகையில், தமிழகத்தில், பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும், கடவுள் இல்லை என்று எழுதி வைக்கப்பட்டுள்ள பலகை அகற்றப்படும், என்றார்.
இந்நிலையில், ஈ.வெ.ரா., சிலையை அகற்றுவதாக சென்னீர்களா? நீங்கள் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, இன்றைய பேச்சில், பா.ஜ., கட்சியின் 'ஆக்ஷன் பிளான்' பற்றி தெளிவாக பேசியுள்ளேன். கோவிலுக்கு வெளியே யார் இருக்க வேண்டும். மற்ற தலைவர்கள் எங்கு இருக்க வேண்டும், என்ற பா.ஜ.,வின் நிலைப்பாடு பற்றி பொதுக் கூட்டத்தில் தெரிவித்து விட்டேன்.
வரும் 2026ல், மக்களுக்கு ஒரு 'சாய்ஸ்' கொடுத்துள்ளோம். மக்கள் அந்த சாய்சுக்கு ஓட்டு போட உள்ளனர். பயந்து பேசிக் கொண்டிருக்கும் தி.மு.க.,வின் நாட்களை மக்கள் எண்ண ஆரம்பித்து விட்டனர்.
'டாக்ஸிக் ஐடியாலஜி' ஒரு விஷம். மதத்தை வைத்து அரசியல் செய்வது, ஜாதிகளை துாண்டி விட்டு பிழைப்பு நடத்துவது, 70 ஆண்டு கால திராவிட அரசியல். ஒரு ஹிந்து எந்த ஒரு மதத்துக்கும் எதிரானவர் இல்லை.
அதே சமயம், அவன் கோவிலுக்கு செல்லும் போது, எப்படி செல்ல வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. அதை ஜனநாயரீதியி ல், 2026ல் செய்து காட்டுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.