Paristamil Navigation Paristamil advert login

சிரியா மீது தாக்குதல் மேற்கொண்ட அமெரிக்கா

சிரியா மீது தாக்குதல் மேற்கொண்ட அமெரிக்கா

9 கார்த்திகை 2023 வியாழன் 07:16 | பார்வைகள் : 10567


சிரியாவில் உள்ள ஈரான் இராணுவம் மற்றும் ஈரான்  சார்பு குழுவொன்றின் ஆயுதக்கிடங்கின் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.

இரண்டு எவ்15 போர் விமானங்களை பயன்படுத்தி இந்த தாக்குதலை மேற்கொண்டதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஒஸ்டின் லொயிட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தளங்கள் மீதான தாக்குதலிற்கு பதிலடியாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க படையினருக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும் என தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் ஈரான் ஆதரவு குழுக்களின் தாக்குதல்கள் தொடர்ந்தால் எங்கள் மக்களை பாதுகாக்க நாங்கள் மேலதிக நடவடிக்கை எடுக்கமாட்டோம் எனவும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு குழுவை சேர்ந்த 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என சிரியாவின் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்