வெளிநாட்டவர்கள் குடியேறுவதற்கான சட்டங்கள் கடுமையாக்கப்படவேண்டும்! - பொதுமக்கள் கருத்து!
9 கார்த்திகை 2023 வியாழன் 07:35 | பார்வைகள் : 5725
பிரான்சில் வெளிநாட்டவர்கள் குடியேறுவதற்கான சட்டங்கள் கடுமையாக்கப்படவேண்டும் என பெரும்பான்மையான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இன்று வெளியான புதிய கருத்துக்கணிப்பு ஒன்றின் படி, பிரெஞ்சு மக்களில் பத்தில் ஏழு பேருக்கும் அதிகமானவர்கள் (76% சதவீதமான மக்கள்) இதனை தெரிவித்துள்ளனர். கருத்துக்கணிப்பில் "வெளிநாட்டவர்களின் குடியுரிமைக்கான சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டுமா?" என கேள்வி எழுப்பப்பட்டது. இதில் 76% சதவீதமானர்கள் ‘ஆம்’ எனவும், 23% சதவீதமானவர்கள் ‘எல்லை’ எனவும், மீதமான 1% சதவீதமானவர்கள் ‘கருத்துக்கள் தெரிவிக்க விரும்பவில்லை!’ எனவும் தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் அதிகளவான அகதிகள் குடியேறுவதாக நீண்டகாலமாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த குடியேற்றம் தொடர்பாக அண்மையில் சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. சிரியா போன்ற நாடுகளில் இருந்து வருவோர்களுக்காக சில இறுக்கமான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்தோடு ஆவணங்கள் இல்லாத குடியேற்றவாதிகளுக்கு அரசு வழங்கும் இலவச மருத்துவ வசதிகளும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே மேற்படி கருத்துக்கணிப்பை CSA நிறுவனம் CNews ஊடகத்துக்காக மேற்கொண்டிருந்தது.
(நன்றி : CNews)