பாலஸ்தீன சிறுவர்கள் விடுத்துள்ள வேண்டுகோள்...
9 கார்த்திகை 2023 வியாழன் 07:37 | பார்வைகள் : 4106
அல்ஷிபா மருத்துவமனைக்கு வெளியே நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ள அவர்கள் இஸ்ரேலின் குண்டுவீச்சினை நிறுத்துமாறு உலகை மன்றாட்டமாக கேட்டுள்ளனர்
ஒக்டோபர் ஏழாம் திகதி முதல் நாங்கள் அழித்தொழிக்கும் நோக்கத்துடனான கொலைகளை எதிர்கொண்டுள்ளோம்,.
குண்டுகள் எங்கள் தலைக்குமேல் விழுகின்றன.
இவை அனைத்தும் உலகின் கண்முன்னால் நடக்கின்ற போதிலும் அவர்கள் தாங்கள் போராளிகளையே கொலை செய்வதாக பொய்சொல்கின்றனர்.
ஆனால் அவர்கள் காசா மக்களையும் அவர்களது கனவுகளையும் எதிர்காலத்தையும் கொலை செய்கின்றனர்.
காசவின் பிள்ளைகள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி அலைந்து திரிகின்றனர்.
நாங்கள் குண்டுவீச்சிலிருந்து தப்புவதற்காக சிபா மருத்துவமனைக்கு வருகின்றோம்.
மருத்துவமனைகள் மீது குண்டுவீச்சு இடம்பெற்றதும் நாங்கள் மரணத்திலிருந்து தப்பியோடுகின்றேம்.
ஆக்கிரமிப்பாளர்கள் எங்களை பட்டினிபோடுகின்றனர் எங்களிற்கு உணவு குடிநீர் நாங்கள் குடிக்க கூடாத நீரை குடிக்கின்றோம்.
நாங்கள் நீங்கள் எங்களை பாதுகாக்க வரவேண்டும் என சத்தமிடுவதற்காக இங்கு வந்துள்ளோம்.
நாங்கள் வாழவிரும்புகின்றோம் எங்களிற்கு சமாதானம் தேவை நாங்கள் சிறுவர்களை கொலை செய்தவர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டும் என விரும்புகின்றோம்.
எங்களிற்கு உணவும் மருந்தும் கல்வியும் வேண்டும்,ஏனைய சிறுவர்களை போல நாங்கள் வாழ விரும்புகின்றோம்.