Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : மதகுரு போன்று ஆடை அணிந்த ஒருவரின் தாக்குதலுக்கு இலக்கான யூத நபர்!

பரிஸ் : மதகுரு போன்று ஆடை அணிந்த ஒருவரின் தாக்குதலுக்கு இலக்கான யூத நபர்!

9 கார்த்திகை 2023 வியாழன் 08:35 | பார்வைகள் : 7762


மதகுரு போன்று ஆடை அணிந்த ஒருவர், தொடருந்து நிலையத்தில் வைத்து யூத நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான நபர் வழக்கு பதிவு செய்துள்ளார்.

La Chapelle மற்றும் Gare du Nord நிலையங்களுக்கு இடையிலான நடைமேடை (couloirs ) பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றது. புதன்கிழமை நண்பகலின் பின்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தாக்குதலுக்கு இலக்கான நபர் காவல்துறையினரை அழைத்து தகவல் தெரிவித்துள்ளார். மதகுரு போன்று நீண்ட ஆடை அணிந்திருந்த ஒருவர் தன்னைத் தாக்கியதாக தாக்குதலுக்கு இலக்கான நபர் காவல்துறையினரிடம் தெரிவித்ததை அடுத்து, La Chapelle நிலையத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

அவர் சிரியாவைச் சேர்ந்தவர் எனவும், தனக்கு 14 வயது எனவும் அவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக அவர் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கானவர் காயமடையவில்லை என்றபோதும், அவர் சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்