இலங்கையில் மருத்துவ பிரிவுகள் செயலிழக்கும் அபாயம்
9 கார்த்திகை 2023 வியாழன் 09:17 | பார்வைகள் : 2645
வைத்தியர் பற்றாக்குறை காரணமாக மூடப்பட்ட , செயலிழக்கப்பட்ட வைத்தியசாலைகள் மற்றும் விசேட வைத்திய பிரிவுகள் 432ஆக காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் செயலிழக்கப்படவுள்ள வைத்தியசாலைகளும் இவற்றுள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இவற்றுள் 20 வைத்தியசாலைகள், வைத்தியர்கள் பற்றாக்குறை காரணமாக முழுவதிலுமாக மூடப்பட்டுள்ள நிலையில் மேலும் 44 வைத்தியசாலைகள் வைத்திய நிபுணர்கள் இன்றி துணை வைத்தியர் ஒருவரின் கட்டுப்பாட்டின் கீழ் நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.
மேலும், விசேட வைத்தியர்கள் இன்றி எதிர்வரும் காலங்களில் மூடப்படவுள்ள மருத்துவப் பிரிவுகளின் எண்ணிக்கை 95 எனவும், சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகள் மற்றும் விசேட வைத்திய பிரிவுகளின் எண்ணிக்கை 150 எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.