Paristamil Navigation Paristamil advert login

பேஸ்புக், இஸ்டகிராம் பயன்படுத்த மாதாந்த கட்டணம்..? - தவறான அறிவுறுத்தலா..??

பேஸ்புக், இஸ்டகிராம் பயன்படுத்த மாதாந்த கட்டணம்..? - தவறான அறிவுறுத்தலா..??

9 கார்த்திகை 2023 வியாழன் 10:27 | பார்வைகள் : 4112


பிரான்சில் பேஸ்புக் மற்றும் இஸ்டகிராம் போன்ற சமூகவலைத்தளங்களை விளம்பரங்கள் இன்றி பார்வையிட மாதாந்த கட்டணம் செலுத்தப்படவேண்டும் என வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இரு சமூகவலைத்தளங்களையும் விளம்பரங்களின் இடையூறு இல்லாமல் பார்வையிட மாதம் 13 யூரோக்கள் செலுத்தினால் போது என ஒரு விளம்பரம் ஒன்று சில நாட்களுக்கு முன்னர் பேஸ்புக் மற்றும் இஸ்டகிராம் செயலிகளில் தோன்றியது. முன் அறிவுப்பு எதுவுமற்ற இந்த அறிவிப்பினால் பயனாளிகள் பெரும் குழப்பத்துக்கு உள்ளாகினர்.

இந்த செய்து ஒரு மோசடியாக இருக்கலாம் என பலர் கருத்து தெரிவித்தனர். ஆனால் அந்த செய்தி உண்மையில் இரு சமூகவலைத்தளங்களின் தாய் நிறுவனமான Meta வினால் வெளியிடப்பட்டிருந்ததே.

சமூகவலைத்தள பயனாளர்களின் தகவல்களை விளம்பரத்தேவைக்காக பயன்படுத்த அதிகளவான கட்டணம் செலுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் 2018 ஆம் ஆண்டு சட்டம் ஒன்றை இயற்றியிருந்தது. இதனை மீறிய குற்றத்துக்காக 2022 ஆம் ஆண்டில் 390 மில்லியன் யூரோக்கள் குற்றப்பணமும் அறவிடப்பட்டிருந்தது.

ஒரு கணக்கிற்கு கிட்டத்தட்ட 6 யூரோக்கள் மாதம் ஒன்றுக்கு Meta செலவிட நேருகிறது. இதனைக் நிறுத்தும் நோக்கிலேயே மாதம் 13 யூரோக்கள் கட்டணம் பயனாளர்களிடம் இருந்து கோருகிறது Meta.

இந்த கட்டணத்தை குறைப்பது தொடர்பிலோ, இல்லாமல் செய்வது தொடர்பிலோ Meta பதிலளிக்க மறுத்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்