Paristamil Navigation Paristamil advert login

ஜப்பான் திரைப்படம் குறித்த நீதிமன்றத்தின் அதிரடிதீர்ப்பு!

ஜப்பான் திரைப்படம் குறித்த நீதிமன்றத்தின் அதிரடிதீர்ப்பு!

9 கார்த்திகை 2023 வியாழன் 13:12 | பார்வைகள் : 5015


இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ஜப்பான். ராஜு முருகன் இதற்கு முன்  குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி ஆகிய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். ஆனால் ஜப்பான் அவருடைய முதலாவது கமர்ஷியல்  திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் திரைப்படத்தின் டீசர், டிரைலர் ஆகியன வெளியாகி இப்பொழுது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இவற்றை பார்க்கும் போது இத்திரைப்படம் கார்த்தியின் ‘சிறுத்தை’ போன்ற ஒரு நகைச்சுவையான கதையம்சம் கொண்ட திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தீபாவளிக்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஜப்பான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் திரையரங்கங்களில் வெளியாகிறது. இரண்டு திரைப்படங்களுக்கும் கடுமையான போட்டி நிலவும் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் ஜப்பான் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்கள் மற்றும் கேபிள் தொலைக்காட்சிகளில் வெளியிடப்படுவதைத் தடுக்க உத்தரவிடக்கோரி திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சென்னை நீதிமன்றம் அந்த கோரிக்கையை ஏற்று ஜப்பான் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை உத்தரவிட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்