Paristamil Navigation Paristamil advert login

சூர்யாவின் அடுத்த அதிரடி திட்டம்....!

சூர்யாவின் அடுத்த அதிரடி திட்டம்....!

9 கார்த்திகை 2023 வியாழன் 13:14 | பார்வைகள் : 2651


சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ‘கங்குவா’ படக்குழுவினர் தாய்லாந்து சென்று அதிரடி ஆக்ஷன் காட்சிகளின் படப்பிடிப்பை முடித்த நிலையில் இன்று முதல் சென்னையில் அடுத்த கட்ட பட படிப்பை தொடங்கியுள்ளது. இதில் சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும், இந்த படப்பிடிப்புடன் சூர்யா காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைவதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து ஒரு சில காட்சிகள் படப்பிடிப்பு மட்டும் இருப்பதாகவும் டிசம்பர் மாதத்திற்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

சென்னை படப்பிடிப்பு முடிந்தவுடன் சூர்யா அடுத்த கட்டமாக சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சூர்யா 43’ படத்தின் படப்பிடிப்புக்கு செல்வார் என்றும் அதனை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ரூ.350 கோடி பட்ஜெட்டில், 10 மொழிகளில் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரையிட திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்