Paristamil Navigation Paristamil advert login

அதிகாலை எழுவதின் ஆரோக்கிய பலன்கள் தெரியுமா?

அதிகாலை எழுவதின் ஆரோக்கிய பலன்கள் தெரியுமா?

9 கார்த்திகை 2023 வியாழன் 13:46 | பார்வைகள் : 1981


தினசரி அதிகாலை எழ வேண்டும் என்பதை பல காலமாக முன்னோர்களும், பல்வேறு ஆசாரங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதிகாலை எழுவது என்பது வெறும் ஒழுக்கம் சார்ந்த செயல்பாடு மட்டுமல்ல. அது ஆரோக்கியம் சார்ந்ததும் கூட. உலகில் உள்ள பல்வேறு வெற்றியாளர்களும் அதிகாலையில் சீக்கிரம் எழும் பழக்கத்தைக் கொண்டவர்கள்தான். எல்லோருக்கும் முன் எழுவது என்பது எல்லோருக்கும் முன் உங்கள் வாழ்வின் இலக்குகளை லட்சியங்களை அடைவது என்று அழகான ஒரு தொடர்பு இருக்கிறது.

இரவு முடிவடையும் அதிகாலை நேரமானது நிசப்தமான சூழல் நிலவும். இயற்கையின் அமைதியான இந்த நேரம் உடலுக்கும், மனதுக்கும் அமைதியை ஏற்படுத்தும் சமயம் ஆகும். வாகன இரைச்சல் இல்லாத அதிகாலை நேர தூயக்காற்றை சுவாசிப்பது நுரையீரலுக்கு நன்மை பயக்கிறது.

அதிகாலை நேரத்தில் எழும்போது அதிக வெயில் அற்ற அந்த சாந்தமான காலநிலை உடலை குளிர்விப்பதுடன், நல்ல உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் ஏதுவான சமயம் ஆகும். இதனால் அந்த நாள் முழுக்க நமது சுறுசுறுப்பு நீடிக்கும். நமது புலன்கள் சுறுசுறுப்பை உணர்ந்து செயல்படும்.

மேலும் அதிகாலை சீக்கிரமே எழுவது அந்த நாளை நீண்ட நாளாக மாற்றும். பல்வேறு செயல்பாடுகளையும் காலையிலேயே எளிதாகவும் செய்து முடிக்க இயலும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்