குடியேற்றவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை - செனட் சபைக்கு 870 சங்கங்கள் கண்டனம்!!

9 கார்த்திகை 2023 வியாழன் 17:03 | பார்வைகள் : 7996
ஆவணங்கள் இல்லாத குடியேற்றவாதிகளுக்கு வழங்கப்படும் அரச மருத்துவ உதவிகள் நிறுத்தப்படுவதற்கு ஆதரவு வழங்கிய செனட் சபைக்கு எதிராக 870 சங்கங்கள் கண்டனம் வெளியிட்டுள்ளன.
இரு நாட்களுக்கு முன்பாக செனட் மேற்சபையில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில், ஆவணங்களற்ற குடியேற்றவாதிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படுவதற்கு ஆதரவு வாக்குகள் பெறப்பட்டன. அதையடுத்து இந்த உதவிகள் நிறுத்தப்படுவது கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. செனட் சபையின் இந்த முடிவுக்கு உடனடியாகவே கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக Fédération des acteurs de la solidarité தன்னார்வ தொண்டு நிறுவனம் இது தொடர்பாக தெரிவிக்கையில், “செனட் சபையின் வீழ்ச்சி தொடங்கியுள்ளது!” என விமர்சித்துள்ளது.
அத்தோடு பிரான்சில் மொத்தமாக 870 சங்கங்கள் இந்த முடிவுக்கு கண்டனம் வெளியிட்டுள்ளன.