கடலில் பிளாஸ்டிக்கை வெளியிடும் நாடுகள் - உலகளவில் இலங்கைக்கு 14ஆவது இடம்
10 கார்த்திகை 2023 வெள்ளி 03:15 | பார்வைகள் : 2755
கடலில் அதிக பிளாஸ்டிக்கை வெளியிடும் நாடுகளில் இலங்கை 14வது இடத்தில் உள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
பதிவான தரவுகளின்படி, நாட்டின் ஆறுகள் மற்றும் நீரோடைகள் மூலம் சுமார் 9,700 மில்லியன் மெட்ரிக் டொன் பிளாஸ்டிக் கடலில் சேர்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றாடல் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் "பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை தொடர்பான தொடர்பாடல் நிகழ்ச்சி" அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வின் போதே இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.
சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க, தெற்காசிய சுற்றாடல் ஒத்துழைப்புத் திட்டத்தின் (SAKEP) பணிப்பாளர் நாயகம் ரொக்கியா கார்ல்டன் ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
மேலும் இது தொடர்பில் சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவிக்கையில் ,
கடலில் உள்ள மீன்களின் அளவை விட பிளாஸ்டிக்கின் அளவு அதிகரித்து வருகிறது. " என தெரிவித்தார்.