Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் யூத பாடசாலைகள் மீது துப்பாக்கி பிரயோகம்...

கனடாவில் யூத பாடசாலைகள் மீது துப்பாக்கி பிரயோகம்...

10 கார்த்திகை 2023 வெள்ளி 07:35 | பார்வைகள் : 7267


கனடாவின் மொன்ரியோலில் யூத பாடசாலைகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் கனடா பல்கலைகழகத்தில் யூத பாலஸ்தீன மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்களையும் அவர் கண்டித்துள்ளார்.

இந்நிலையில் யூத பாடசாலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலையின் முன் கதவில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதற்கான அடையாளம் காணப்படுவதாக பாடசாலை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இஸ்ரேல்- ஹமாஸ் யுத்தம் கனடாவை ஆழமாக பிளவுபடுத்தியுள்ளது

பெருமளவான மக்கள் யுத்த நிறுத்தம் அவசியம் என குரல்கொடுக்க ஆரம்பித்துள்ளனர். 

இந்நிலையில் உணர்வுகள் அதிகமாக உள்ளதும் அச்சம் காணப்படுவதும் எனககு தெரியும்.

ஆனால் ஒருவரையொருவர் தாக்குவது கனடா மக்களின் இயல்பு இல்லை என பிரதமர் தெரிவித்துள்ளார். 

புதன்கிழமை கனடாவின் மொன்ரியோலில் பல்கலைகழகத்தில் பாலஸ்தீன இஸ்ரேல் ஆதரவாளர்கள் மத்தியில் வன்முறை மோதல் இடம்பெற்றுள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்