Paristamil Navigation Paristamil advert login

3 நாள் போர் நிறுத்தத்திற்கான சாத்தியம் உள்ளதா..?

3 நாள் போர் நிறுத்தத்திற்கான சாத்தியம் உள்ளதா..?

10 கார்த்திகை 2023 வெள்ளி 08:55 | பார்வைகள் : 8738


இஸ்ரேல் - ஹமாஸ் போர் ஆரம்பித்து ஒரு மாதம் கடந்துள்ளது.

 காசாவில் மூன்று நாள் யுத்த நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐக்கியநாடுகளை சேர்ந்த அதிகாரியொருவரும் மேற்குலகை சேர்ந்த அதிகாரியொருவரும் இதனை தெரிவித்துள்ளனர்.

ஹமாசிடம் பணயக்கைதிகளாக சிக்குண்டுள்ளவர்களை விடுதலை செய்வதற்கு பதில் மூன்று நாள் யுத்த நிறுத்தம் என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.

கட்டார் எகிப்து அமெரிக்கா ஆகியநாடுகள் இணைந்து இந்த யுத்த நிறுத்தத்திற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

மூன்று நாள் யுத்த நிறுத்தம் குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டால் மோசமடையும் நிலைமையின் கீழ் வாழும் 2.3 மில்லியன் பாலஸ்தீன மக்களிற்கு மனிதாபிமான உதவிகளை அனுப்புவது சுலபமாகும் .

இந்த வாரம் கெய்ரோவில் போர்நிறுத்தத்திற்கான இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளது.

சிஐஏயின் தலைவரும் இஸ்ரேலிய குழுவினரும் இதில் கலந்துகொண்டனர் என எகிப்திய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்