Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் - ஹமாஸ் போர் குறித்து துருக்கி ஜனாதிபதி கண்டனம்

 இஸ்ரேல் - ஹமாஸ் போர் குறித்து துருக்கி ஜனாதிபதி கண்டனம்

10 கார்த்திகை 2023 வெள்ளி 09:52 | பார்வைகள் : 10311


இஸ்ரேல் - ஹமாஸ் விவகாரத்தில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க முடியாத அளவிற்கு மேற்கத்திய நாடுகள் பலவீனமாக உள்ளது.

 துருக்கி ஜனாதிபதி எர்டோகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஹமாஸ் படைகள் மீதான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளை கண்டித்துள்ள எர்டோகன், இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இஸ்ரேல் முன்னெடுக்கும் இந்த கொடூர படுகொலைகளை மேற்கத்திய நாடுகள் வெறுமனே வேடிக்கை பார்ப்பதாக குறிப்பிட்டுள்ள எர்டோகன், போர் நிறுத்தம் தொடர்பில் வலியுறுத்தவும் மேற்கத்திய நாடுகள் தயங்குவதாக தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, இஸ்லாமிய நாடுகள் இந்த கொடூரங்களுக்கு குரல் எழுப்பாமல் எப்போது நாம் விழித்துக்கொள்வோம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் உதவிகளுக்காக போர் நிறுத்தம் என்பதையும் எர்டோகம் கடுமையாக விமர்சித்துள்ளார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்