Paristamil Navigation Paristamil advert login

இலங்கையிலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை

இலங்கையிலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை

10 கார்த்திகை 2023 வெள்ளி 10:32 | பார்வைகள் : 7396


இலங்கையிலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் அவசியத்தன்மைக்கு ஏற்ப எதிர்வரும் 13 ஆம் திகதி விடுமுறை அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. .

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்படுவதாக, கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

இந்த விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகள் இடம்பெற வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு விடுமுறை அளிக்கும் பாடசாலைகளின் அதிபர்கள் இது தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்