Paristamil Navigation Paristamil advert login

Argenteuil : சேமிப்பகம் தீக்கிரை! - நால்வர் காயம்!!

Argenteuil : சேமிப்பகம் தீக்கிரை! - நால்வர் காயம்!!

10 கார்த்திகை 2023 வெள்ளி 11:55 | பார்வைகள் : 8604


Argenteuil நகரில் உள்ள சேமிப்பகம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

rue Jean Grandel வீதியில் உள்ள 2,000 சதுர மிற்றர் அளவு கொண்ட சேமிப்பகத்தில் காலை 9 மணி அளவில் திடீரென தீ பரவியது. உணவு பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென பரவிய தீயினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். 80 வரையான தீயணைப்பு படையினர் இணைந்து தீயை கட்டுப்படுத்தினர். இச்சம்பவத்தில் நான்கு ஊழியர்கள் காயமடைந்தனர்.

தீ வேகமாக பரவியதை அடுத்து, கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்தது. இதனால் தீயணைப்பு படையினரால் உள் நுழைய முடியாமல் போயுள்ளது. அதேவேளை சேமிப்பில் இருந்த அனைத்து பொருட்களும் தீக்கிரையாகியுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்