Paristamil Navigation Paristamil advert login

நாம் ஏன் இடது கையில் மட்டும் கடிகாரம் காட்டுகிறோம் தெரியுமா..?

 நாம்  ஏன் இடது கையில் மட்டும் கடிகாரம் காட்டுகிறோம் தெரியுமா..?

10 கார்த்திகை 2023 வெள்ளி 13:05 | பார்வைகள் : 2085


எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா - ஏன் நாம் இடது கையில் மட்டும் கடிகாரம் காட்டுகிறோம்? ஏன் பெரும்பாலும் வலது கையில் கட்டுவதில்லை?

மக்கள் இதை பல ஆண்டுகளாக பின்பற்றுகிறார்கள்.  அதற்குப் பின்னால் ஏதேனும் காரணம் இருக்கிறதா? அது என்னவாக இருக்கும்? Quora என்ற ஆன்லைன் தளத்திலும் இதே கேள்வி கேட்கப்பட்டது. பல பயனர்கள் இது குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால் சரியான பதில் என்ன? இதன் பின்னணியில் உள்ள அறிவியல் காரணத்தை இப்பொது உங்களுக்கு சொல்கிறோம்.

முதலாவது காரணம், பெரும்பாலான மக்கள் தங்கள் வலது கையால் வேலை செய்கிறார்கள். வலது கை அடிக்கடி பிஸியாக இருப்பதால், இடது கையில் வாட்ச் அணிந்து நேரத்தைச் சரிபார்ப்பதில் சிக்கல் இல்லை. இடது கையில் ஒரு கடிகாரத்தை கட்டுவதன் மூலம், அது பாதுகாப்பாக உள்ளது மற்றும் 
பெரும்பாலான நிறுவனங்கள் இடது கையை மனதில் வைத்து கடிகாரங்களைத் தயாரிக்க இதுவே காரணம். அதே நேரம் அறிவியல் ரீதியாகவும் நாம் எதையும் வலதுகையால் செய்து பழகிவிட்டோம். அதனால் வாட்ச் முட்களை சரி செய்வது வலது கையால் செய்வோம். அப்போது கடிகாரம் இடது கையில் இருந்தால் தானே சரியாக இருக்கும்.

முட்கள் சரி செய்வது கூட அதனால் வெளிப்புறம் வருமாறு நிறுவனங்கள்  வைத்துள்ளன. நீங்கள் வலது கையில் கடிகாரம் காட்டினால் இந்த முட்களை சரி செய்வது உள்நோக்கிய இருக்கும் . சரிசெய்வது கடினமாக இருக்கும். ஆனால் அதைத் தாண்டியும் சிலர் வலது கையில் வாட்ச் காட்டுகிறார்கள். இதில் தவறேதும் இல்லை.சொல்லபோனார் இது இடதுபுற மூளையைத் தூண்டும்.

அதே போல நேராக இருக்கும் சுவர்கடிகாரம், மேசை கடிகாரத்தில்  12 மணி முள்ளில் இருந்து வலப்புறம் நகரும் முள்ளை இடது கையில் பார்த்து பழகியிருக்கும் . வலது கையில் கிட்டும் பொது அது கொஞ்சம் வேறுபட்டதாக தோன்றும்.

பழங்காலங்களில், பலர் தங்கள் கைக்கடிகாரங்களை தங்கள் மணிக்கட்டில் கட்டுவதை விட தங்கள் பாக்கெட்டுகளில் வைத்திருந்தனர். தென்னாப்பிரிக்காவில் விவசாயிகள் போராட்டத்தின் போது தான் மணிக்கட்டு பழக்கம் மிகவும் பிரபலமானது. பெரும்பாலான உயரடுக்கு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த வழியை கடைபிடித்து  வந்தனர். இப்போது பொதுவான விஷயமாக மாறிவிட்டது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்