Paristamil Navigation Paristamil advert login

தேங்காய் ஐஸ்கிரீம்

தேங்காய் ஐஸ்கிரீம்

10 கார்த்திகை 2023 வெள்ளி 13:10 | பார்வைகள் : 2657


ஐஸ்கிரீம் என்றாலே நம்மில் பலருக்கு நாவில் எச்சில் ஊறும். ஏனென்றால், இதை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. கோடை காலமோ.. மழை க்காலமோ… ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு மட்டும் நாம் நேரம் காலம் பார்ப்பதில்லை. அதை வெளியில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம். அதுவும் தேங்காய் வைத்து. தேங்காய் வைத்து எப்படி ஐஸ்கிரீம் என்ற ஆச்சரியம் புரிகிறது.. சொல்கிறோம்..

தேவையான பொருட்கள் :

தேங்காய் பால் - 4 கப்.
தேங்காய் பத்தை - 1 கப்.
சர்க்கரை - 1 கப்.
சோள மாவு - 4 ஸ்பூன்.
பிரெஷ் கிரீம் - 1 கப்.

செய்முறை :

முதலில் தேங்காய் ஐஸ்கிரீம் செய்ய, ஒரு தேங்காயை உரித்து, உடைத்து தேங்காய் பத்தையை மட்டும் தனியாக எடுத்து, அதை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். இப்போது ஒரு பெரிய பாத்திரத்தில், நறுக்கிய தேங்காய், சோள மாவு மற்றும் 1/2 கப் குளிர்ந்த தேங்காய்ப் பால் சேர்த்து நன்கு கலக்கவும்.

இதையடுத்து, ஒரு ஆழமான பாத்திரத்தை மிதமான தீயில் வைத்து, அதில் மீதமுள்ள பாலை சேர்த்து கொதிக்க வைக்கவும். இப்போது அதில் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை முழுவதுமாக கரையும் வரை நன்றாக கிளறவும். பின்னர் இதை 4-5 நிமிடங்கள் கிண்டியபடி கொதிக்க வைக்கவும்.

இப்போது, தேங்காய் பால் மற்றும் சோள மாவு கலவையை பாலுடன் சேர்த்து மீண்டும் நன்றக கலக்கவும். பால் நன்றாக வற்றியதும், அடுப்பை அனைத்து சேர்மத்தை குளிர்விக்கவும்.

சேர்மம் நன்றாக ஆறியதும் அதில் பிரெஷ் கிரீம் சேர்க்கவும். ஒரு அலுமினிய பாத்திரத்தை எடுத்து அதில் சேர்மத்தை ஊற்றவும். இப்போது, இந்த பாத்திரத்தை அலுமினிய ஃபாயில் ஷீட் அல்லது க்ளிங் ஷீட் மூலம் மூடி, ஃப்ரீசரில் வைக்கவும்.

இந்த கலவையை சுமார் 6-7 மணி நேரம் அப்படியே விட்டுவிடவும். இந்த கலவையை எடுத்து பிளெண்டர் ஜாடிக்குள் மாற்றி, மென்மையான வடிவம் கிடைக்கும் வரை நன்றாக பிலேண்ட் செய்யவும்.

பின்னர் இந்த கலவையை மீண்டும் அலுமினிய பாத்திரத்தில் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய தேங்காய் சில்லுகளை சேர்த்து அலுமினிய ஃபாயில் ஷீட்டால் மூடி, கலவை செட் ஆகும் வரை உறைய வைக்கவும். 5 முதல் 6 மணி நேரம் கழித்து எடுத்தால் தேங்காய் ஐஸ்கிரீம் தயார்

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்