ஜெயித்ததா ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்?
10 கார்த்திகை 2023 வெள்ளி 13:20 | பார்வைகள் : 3064
மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ நடிகராகவும் அரசியல்வாதியாகவும் இருக்கிறார். அவருக்கு எதிராக இளவரசு அரசியல் செய்து வருகிறார். ஷைன் டாம் சாக்கோவின் சாம்ராஜ்யத்திற்கு 4 ரவுடிகள் நான்கு இடங்களில் தூண்களாக உள்ளனர். அவர்களை ஒவ்வொருவராக தூக்க திட்டம் போட்டு தூக்குகின்றனர். அப்படி மதுரையில் இருக்கும் ரவுடி தான் நம்ம லாரன்ஸ். அவரை காலி செய்யவும் ஆள் அனுப்பப்படுகிறது.
சினிமாவில் ஆர்வம் இருக்கும் லாரன்ஸ் எஸ்.ஜே. சூர்யாவிடம் தன்னை வைத்து ஒரு படத்தை இயக்க சொல்கிறார். ராகவா லாரன்ஸுக்கு போட்ட ஸ்கெட்ச் வொர்க்கவுட் ஆனதா? எஸ்.ஜே. சூர்யாவின் பின்புலம் என்ன? ராகவா லாரன்ஸ் இறுதியில் என்ன ஆகிறார் என செம அழகாக படத்தை செதுக்கி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
வேறலெவல் ஸ்க்ரீன்பிளே: ராகவா லாரன்ஸ் தனது ஒட்டுமொத்த நடிப்பை இந்த படத்தில் அப்படியே கொட்டித் தீர்த்து இருக்கிறார். இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ருத்ரன் மற்றும் சந்திரமுகி 2 படங்கள் படுதோல்வியை சந்தித்த நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் அவருக்கு கம்பேக் படம் தான்.
எஸ்.ஜே. சூர்யா வழக்கம் போல தனது மிடாஸ் டச்சை இந்த படத்திலும் கொடுத்து கார்த்திக் சுப்புராஜுக்கும் லாரன்ஸுக்கும் கம்பேக் கொடுக்க வைத்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சினிமா ஒரு நாட்டின் அரசியலையே மாற்றும் சக்தி கொண்டது என்பதை நிஜத்தில் நிரூபித்துள்ளது. அதை சினிமாவில் காட்டி அதன் சக்தியை நிரூபிக்க வேண்டும் என்கிற முயற்சியில் வெற்றிக் கண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
75களில் நடக்கும் கதை என்பதால் பீரியட் போர்ஷனுக்கு பலரும் பல மெனக்கெடல்களை போட்டுள்ளனர். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும் அதில் ஒலிக்கும் பறை இசையும் சும்மா பட்டையை கிளப்புகிறது. மதுரை மற்றும் காட்டுப் பகுதி என கேமராவின் வொர்க் அபாரம். ராகவா லாரன்ஸின் பேக் ஸ்டோரி, அம்மா சென்டிமென்ட் என அனைத்துமே டாப் நாட்ச்சாக உள்ளது. எஸ்.ஜே. சூர்யாவின் ட்விஸ்ட் சும்மா தெறிக்கிறது.
படத்தின் முதல் பாதியில் அந்த உலகத்துக்கு ரசிகர்களை கொண்டு செல்ல கார்த்திக் சுப்புராஜ் ரொம்ப ஸ்லோவாக கதை சொல்வது சற்றே ரசிகர்களை அப்செட் ஆக்கும். ஆனால், இடைவேளைக்கு முன்பாக சூடுபிடிக்கும் படம் இறுதி வரை சும்மா சரவெடியாக உள்ளது. சில இடங்களில் லாஜிக் ஓட்டைகள் வழக்கம் போல மைனஸாக மாறி விடுகிறது.