Paristamil Navigation Paristamil advert login

தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினி படங்கள் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகுமா?

தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினி படங்கள் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகுமா?

10 கார்த்திகை 2023 வெள்ளி 14:02 | பார்வைகள் : 2147


பொங்கல் விருந்தாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’லால் சலாம்’ தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ சிவகார்த்திகேயன் நடித்த ’அயலான்’ மற்றும் சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை 4’ படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்த ’லால் சலாம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போகலாம் என்று சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. எனவே ’கேப்டன் மில்லர்’ ’அயலான்’ ’அரண்மனை 4’ ஆகிய நான்கு படங்கள் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் ’லால் சலாம்’’ திரைப்படம் பொங்கல் திருநாளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ’லால் சலாம்’ படமும் பொங்கல் ரேசில் இணைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது

முதல் முறையாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரது படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நான்கு படங்களும் திட்டமிட்டபடி பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகுமா? அல்லது ஏதாவது ஒரு படங்கள் பின்வாங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்