Paristamil Navigation Paristamil advert login

தமிழக, பஞ்சாப் கவர்னருக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

தமிழக, பஞ்சாப் கவர்னருக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

10 கார்த்திகை 2023 வெள்ளி 20:40 | பார்வைகள் : 1892


தமிழகம்  மற்றும் பஞ்சாப் அரசு கவர்னர்களுக்கு எதிராக  தொடரப்பட்ட வழக்கில்  உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தமிழக கவர்னர் ரவி, அரசு உத்தரவுகளை நிறைவேற்றுவதில் தாமதம் செய்கிறார். மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கவர்னர் கிடப்பில் போடுவதால், அரசு பணிகள் முடங்கி உள்ளது. கவர்னர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும். 

அரசியல்சாசனம் வழங்கி உள்ள அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக கூறி கவர்னர் ரவிக்கு எதிராக தமிழக அரசு சார்பில், கடந்த அக்.,30ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தஹி மற்றும் அபிஷேக் சிங்வி ஆகியோர் ஆஜர் ஆனார்கள்.

தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டதாவது: மசோதாக்களை கிடப்பில் போட்டு அரசின் செயல்பாடுகளை கவர்னர் முடக்குகிறார். தமிழகம் முதல் காஷ்மீர் வரை கவர்னர்களின் பிரச்னைகளை சொல்லும் வகையில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 

2020ம் ஆண்டு முதல் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா கிடப்பில் போட்டுள்ளார். பணி நியமனம் தொடர்பாக எந்த ஒரு கோப்புக்கும் அனுமதி கொடுக்க மறுக்கிறார். கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோப்புக்கு கூட அனுமதி  இல்லை என வாதிடப்பட்டது.

இதனையடுத்து, நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு கூறுகையில், கவர்னருக்கு எதிரான  வழக்கை முக்கியமானதாக பார்க்கிறோம். சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கவர்னர்கள் நிறுத்தி வைக்க முடியாது. கவர்னரின் செயலாளர், உள்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், மனு குறித்து மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர். வழக்கை நவம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

பஞ்சாப் கவர்னர் செயல்பாடு: நீதிபதிகள் அதிருப்தி

பஞ்சாப் கவர்னருக்கு எதிராக அம்மாநில அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு கூறுகையில்,  பஞ்சாப் அரசு கவர்னர் செயல்பாடு கவலை அளிக்கிறது. பஞ்சாப் அரசும்,  கவர்னரும் அரசியல் சாசனத்தை சீர்குலைக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள்? மாநில அரசு அனுப்பிய மசோதாவை எப்படி கிடப்பில் போட முடியும்?. அரசின் செயல்பாடுகளை எவ்வாறு முடக்க முடியும்?  கவர்னருக்கு இதுபோன்ற அதிகாரங்களை கொடுத்தது யார்? நடப்பது மிக கவலையளிக்கிறது எனக்கூறினர்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்