Paristamil Navigation Paristamil advert login

சியாரா புயல் பாதிப்பு - ஒரு வாரத்துக்கு மேலாக மின்சாரம் இல்லாமல் தவிக்கும் மக்கள்!

சியாரா புயல் பாதிப்பு - ஒரு வாரத்துக்கு மேலாக மின்சாரம் இல்லாமல் தவிக்கும் மக்கள்!

10 கார்த்திகை 2023 வெள்ளி 15:31 | பார்வைகள் : 5751


சியாரா புயல் தாக்குதலில் மின்சார துண்டிப்புக்கு உள்ளான பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மின் இணைப்பு சரிசெய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 2 ஆம் திகதி பிரான்சின் மேற்கு நகரங்களை இந்த சியாரா புயல் சூறையாடிச் சென்றிருந்தது. இதில் நால்வர் பலியானதுடன், 40 பேர் வரை காயமடைந்தும் இருந்தனர். ஒரு மில்லியனுக்கும் அதிகமான வீடுகளுக்கு மின் துண்டிப்பு ஏற்பட்டிருந்தது. மின் இணைப்பு மிக வேகமாக சீர்செய்யப்பட்டு வருகின்ற போதும், இன்னும் 25,000 பேர் மின் இணைப்பு இல்லாமல் தவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் பாதிப்பு ஏற்பட்டு எட்டு நாட்கள் ஆன நிலையில், மின் இணைப்பு சரிசெய்யப்படவில்லை.

அதேவேளை, மின் இணைப்பை சீர் செய்வதற்காக தற்போது 1,250 ஊழியர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் அனைத்து இடங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்