Paristamil Navigation Paristamil advert login

வெள்ள அனர்த்த எச்சரிக்கை நீடிப்பு! - நான்கு மாவட்ட்களில் அடை மழை!!

வெள்ள அனர்த்த எச்சரிக்கை நீடிப்பு! - நான்கு மாவட்ட்களில் அடை மழை!!

10 கார்த்திகை 2023 வெள்ளி 16:10 | பார்வைகள் : 11334


இன்று வெள்ளிக்கிழமை பா-து-கலே மாவட்டத்துக்கு வெள்ள அனர்த்தம் காரணமாக ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், நாளை சனிக்கிழமையும் அங்கு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

பா-து-கலே மாவட்டத்தில் 1 நாட்களுக்குரிய மழை கடந்த 24 மணிநேரத்தில் பெய்துள்ளது. தீயணைப்பு படையினர் இதுவரை 50 இற்கும் மேற்பட்ட மீட்புப்பணியினை மேற்கொண்டுள்ளனர். அங்கு விரைவில் இயற்கை பேரிடர் நிலை அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. இந்த வெள்ள அபாயம் காரணமாக நாளை சனிக்கிழமையும் ‘சிவப்பு’ எச்சரிக்கையே விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பா-து-கலேயுடன் Charente-Maritime, Nord மற்றும் Vendée ஆகிய மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை (செம்மஞ்சள்) விடுக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்