Paristamil Navigation Paristamil advert login

30 ஆண்டுகளின் பின்னர் பிரதமர் இல்லாமல் பயன்படுத்தப்பட உள்ள 49.3 அரசியலமைப்பு!!

30 ஆண்டுகளின் பின்னர் பிரதமர் இல்லாமல் பயன்படுத்தப்பட உள்ள 49.3 அரசியலமைப்பு!!

10 கார்த்திகை 2023 வெள்ளி 16:45 | பார்வைகள் : 4306


49.3 எனும் அரசியலமைப்பு சட்டத்தினை பயன்படுத்துவதில் புகழ்பெற்ற Elisabeth Borne இன் அரசாங்கம், முதன் முறையாக பிரதமர் இல்லாமல் இந்த அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்த உள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் இறுதிக்கட்ட வாசிப்பு வரும் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அன்றைய நாள் பிரதமர் Elisabeth Borne அயர்லாந்துக்கு பயணிக்க உள்ளார். அவருக்கு பதிலாக பாராளுமன்றத்தின் பிரதமரின் பொறுப்பாளர் ஒருவர் சமூகமளிப்பார். அன்றைய தினமும் 49.3 எனும் அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்துவார்கள் என அறிய முடிகிறது.

பிரான்சில் பிரதமர் ஒருவரல்லாதவர் இந்த அரசியலமைப்பை பயன்படுத்துவது 1991 ஆம் ஆண்டின் பின்னர் இடம்பெறுகிறது. அதேவேளை, ஜனாதிபதி மக்ரோனின் அரசாங்கம் இந்த அரசியலமைப்பை பயன்படுத்துவது இது 17 ஆவது தடவையாகும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்