Paristamil Navigation Paristamil advert login

ஜப்பானில் உருவான புதிய தீவு

ஜப்பானில் உருவான புதிய தீவு

11 கார்த்திகை 2023 சனி 05:09 | பார்வைகள் : 7148


ஜப்பானில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதில் புதிய தீவு ஒன்று உருவாகி உள்ளது. 

ஜப்பானின் தீவான ஐவோ ஜிமாவுக்கு அருகே ஏற்பட்ட இந்த வெடிப்பினால் 160 அடி உயரத்திற்கு எரிமலைக் குழம்புகள் தூக்கி வீசப்பட்டன.

இந்நிலையில் திடீரென ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் சுமார் 330 அடி விட்டம் கொண்ட புதிய தீவு உருவாகி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை எரிமலை தொடர்ந்து வெடித்தால் இந்தத் தீவு நிரந்தரமாக இருந்து விடும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் , புதிய தீவு சிறியதாக தோன்றினாலும், அது நீருக்கடியில் 40 கிலோ மீட்டர் விட்டமும், இரண்டு கிலோ மீட்டர் உயரமும் கொண்டதாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளளனர்.   

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்