Paristamil Navigation Paristamil advert login

உலகக்கோப்பையை விட்டு வெளியேறிய பின் ஆப்கானிஸ்தான் வீரர்களின் நெகிழ்ச்சி செயல்

உலகக்கோப்பையை விட்டு வெளியேறிய பின் ஆப்கானிஸ்தான் வீரர்களின் நெகிழ்ச்சி செயல்

11 கார்த்திகை 2023 சனி 05:33 | பார்வைகள் : 4210


ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்கள் தங்களுக்கு ஆதரவு அளித்த இந்திய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததனால் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறமுடியாமல் வெளியேறியது.

ஆனால், பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவு ஆப்கானிஸ்தானுக்கு இருந்தது. ஆப்கானிஸ்தான் வீரர்களின் செயல்பாடு, போராடும் குணம் பலரையும் கவர்ந்தது.

எனினும், அடுத்தடுத்த தோல்விகளால் ஆப்கானிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு கிட்டவில்லை. இந்த நிலையில் ஆப்கான் வீரர்கள் உருக்கமான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.  

ஹாஷ்மத் ஷாஹிடி தனது பதிவில்,

'ஒரு நம்ப முடியாத பயணம் முடிவுக்கு வருகிறது. போட்டியின் நினைவுகளை எடுத்து வாழ்நாள் முழுவதும் அவற்றைப் போற்றுவோம். 

நாங்கள் எங்கு சென்றாலும் எங்களுக்கு ஆதரவளித்த இந்திய மக்களுக்கு சிறப்பு நன்றி. ஆப்கானிஸ்தான் வாழ்க' என தெரிவித்துள்ளார்.

விக்கெட் கீப்பர் குர்பாஸ் தனது பதிவில்,

'ஒட்டுமொத்தமாக இது ஒரு சிறந்த உலகக்கோப்பை 23, நாங்கள் அரையிறுதியை எட்டுவதற்கு எங்களால் முடிந்ததை செய்தோம், ஆனால் விடயங்கள் எங்கள் வழியில் செல்லவில்லை. 

பல சிறந்த சாதனைகளுடன் CWC23ஐ முடித்தோம். நல்ல மற்றும் கெட்ட நாட்களில் எங்களை ஆதரித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி மற்றும் போட்டி முழுவதும் ஆதரவளித்த இந்திய ஆதரவாளர்களுக்கு சிறப்பு நன்றி' என கூறியுள்ளார்.

கடைசி போட்டியில் 97 ஓட்டங்கள் விளாசிய ஓமர்சாய் தனது பதிவில்,

'கடைசி நாள் இந்தியாவில் இறங்கியதும் ஒரு அழகான பயணம் தொடங்கியது. 

இது என்னை ஒரு வீரராகவும், ஒரு நபராகவும் வளர உதவியது, கடவுள் விரும்பினால், இது இன்னும் பல அழகான நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளின் தொடக்கமாக இருக்கும்...என் நாட்டையும், என் மக்களையும் எப்போதும் பெருமைப்படுத்த முடியும் என நம்புகிறேன்' என தெரிவித்துள்ளார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்