யூதமத தாக்குதல்களுக்கு எதிரான பேரணி! - பல்வேறு வீதிகள் முடக்கம்!!
11 கார்த்திகை 2023 சனி 05:59 | பார்வைகள் : 4125
யூத மதத்துக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து நாளை ஞாயிற்றுக்கிழமை பரிசில் மாபெரும் பேரணி ஒன்று இடம்பெற உள்ளது. அதையடுத்து பரிசில் பல்வேறு வீதிகள் மூடப்பட உள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் இந்த ஆர்ப்பாட்டம் Esplanade des Invalides (7 ஆம் வட்டாரம்) பகுதியில் ஆரம்பமாகிறது. பின்னர் Avenue du Maréchal Galliéni, Quai d'Orsay, Boulevards Saint-Germain மற்றும் Saint-Michel சதுக்கம் வழியாகச் சென்று மாலை 7 மணி அளவில் Place Edmond Rostand (6 ஆம் வட்டாரம்) பகுதியில் சென்று நிறைவடைகிறது.
இதன் போது குறித்த வீதிகள் அதை அண்மித்துள்ள தொடருந்து நிலையங்கள் மூடப்பட உள்ளதாக அறிய முடிகிறது. வாகங்களில், மகிழுந்துகளில் செல்பவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதல் ஆரம்பமான இந்த ஒரு மாதத்தில் பிரான்சில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட யூதஎதிர்ப்பு தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. இதனைக் கண்டித்தே இந்த பேரணி நாளை இடம்பெற உள்ளது. இதில் முன்னாள் ஜனாதிபதிகள் பிரான்சுவா ஒலோந்து, நிக்கோலா சர்கோஷி உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
(புகைப்படம் : BFMTV)