இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்ய விரைவில் அனுமதி?

11 கார்த்திகை 2023 சனி 07:27 | பார்வைகள் : 8351
ஜனாதிபதி செயலகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை பெற்றுக்கொண்டதன் பின்னர் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாட்டின் வாகன சந்தையை பாதிக்கும் என்பதால், வாகன இறக்குமதியை அனுமதிப்பதற்கான குறிப்பிட்ட திகதியை அறிவிக்க முடியாது என்று கூறினார்.
திகதியை அறிவித்தால் உள்ளூர் வாகன விற்பனையில் பாரிய மாற்றம் ஏற்படும் எனவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கடந்த 20ஆம் ஆண்டுமுதல் வாகனங்களை இறக்குமதி செய்தி தடைவிதிக்கப்பட்டதுடன், கொவிட் தொற்று பரவல் மற்றும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த தடை இன்னமும் அகற்றப்படவில்லை.
அண்மையில், சில வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்ட போதிலும், பொது போக்குவரத்துக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிகள் தொடர்ந்து வழங்கப்படாதுள்ளது.
இந்நிலையிலேயே வாகன இறக்குமதி தொடர்பில் ஆய்வு செய்ய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரைகள் ஜனாதிபதியிடம் தற்போது கையளிக்கப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1