Paristamil Navigation Paristamil advert login

தீயணைப்பு துறையில் பெண்கள் நியமனம் செய்த வங்காளதேசம்

தீயணைப்பு துறையில் பெண்கள் நியமனம் செய்த வங்காளதேசம்

11 மார்கழி 2023 திங்கள் 09:32 | பார்வைகள் : 6583


வங்காளதேசத்தில் முதல் முறையாக  தீயணைப்பு துறையில் பணிபுரிய பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி தலைநகர் டாக்கா அருகே உள்ள புர்பாச்சலில் 15 பெண்கள் தீயணைப்பு வீரர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதற்கு முன்னரும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை பெண்கள் பணிபுரிந்துள்ளனர்.

இருப்பினும், தீயணைப்பு வீரர்களாக பெண்கள் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இது பாலின பாகுபாட்டை நீக்கும் முக்கிய நடவடிக்கைகளுள் ஒன்று என அந்த நாட்டின் உள்துறை மந்திரி அசாதுஸ்மான் கான் கமல் தெரிவித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்